செய்திகள்
மதுரையில் தீபாவளி குப்பை அகற்றும் DYFI தூய்மை பணி
🕒 9 நவ., 2026, 03:45 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
மதுரை மாநகர் பகுதியில் குவிந்த தீபாவளி குப்பைகளை அகற்றும் பணி மாநகராட்சியுடன் இணைந்து நடைபெற்றது. தூய்மை பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்கும் வண்ணம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் இப்பணி 7வது ஆண்டாக நடைபெற்றது. மீனாட்சியம்மன் கோவில் சுற்றியுள்ள வீதிகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தேங்கிய 128.40 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. இந்நிகழ்வில் மாநகராட்சி பொறுப்பு மேயர் நாகராஜன் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.








