செய்திகள்
நெல்லை அருகே கனமழையால் வீடு இடிந்து விழுந்து விபத்து – இடிபாடுகளில் சிக்கிய தந்தை, மகன், மகள் என 3 பேர் உயிருடன் மீட்பு!
🕒 9 நவ., 2026, 02:12 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 4
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (4)படத்தைத் தொடவும்
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள ஆரைக்குளத்தில் கனமழை காரணமாக வீடு திடீரென இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன், மகள் ஆகிய மூன்று பேர் இடிபாடுகளில் சிக்கினர்.
நேற்று பெய்த கனமழையின் காரணமாக வீட்டின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது. அப்போது வீட்டிற்குள் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாளையங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் தர்மராஜின் மகன் ஞானசெல்வன் (51), அவரது மகன் சாமுவேல் இன்பராஜ் (18), மகள் பெர்லின் ரஞ்சனா (15) ஆகிய மூன்று பேரையும் இடிபாடுகளில் இருந்து பத்திரமாக மீட்டனர்.
கனமழையால் வீடு இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








