செய்திகள்
கொடைக்கானல் பாம்பார்புரம் பிரதான சாலையில் வனத்துறை வாகனம் கவிழ்ந்து விபத்து ,வனத்துறை பணியாளர்கள் லேசான காயங்களுடன் மீட்பு
🕒 8 நவ., 2026, 04:46 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலாத்தலமாக இருந்து வருகிறது இங்கு பெரும்பாலான இடங்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
சுற்றுலா தலங்களுக்கு செல்ல பிரதான சாலையாக பாம்பார்புரம் சாலை இருந்து வருகிறது தொடர்ந்து சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்காக வனத்துறை பணியாளர்கள் வாகனத்தில் சென்று உள்ளனர் அப்போது பாம்பார்புரம் பகுதியில் செல்லும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் பத்து அடி உயரத்திலிருந்து கவிழ்ந்தது.
இதில் வாகனத்தில் பயணித்த 6 பணியாளர்களை லேசான காயங்களுடன் அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . தொடர்ந்து வனத்துறை வாகனம் கட்டுப்பாடு இழந்து விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது .








