மதுரை நகைக் கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி மற்றும் கூட்டாளி நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுரையில் உள்ள பிரபல நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சியும், கொள்ளையில் தொடர்புடைய நிஷாந்தின் தந்தை சுரேஷும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்தும் திருடப்பட்ட நகைகள் முழுமையாக மீட்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இருவரையும் காவல்துறையினர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி சங்கீதா, இருவருக்கும் வரும் 29ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். நீதிபதியின் உத்தரவை அடுத்து, இருவரும் பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.









