செய்திகள்
*திருச்சுழி அருகே அரசு டாஸ்மாக் கடையில் காலியான மதுபான பாட்டில்களை ஊழியர்கள் திரும்பப் பெறாததால் மது பிரியர்கள் வாக்குவாதம்*
🕒 1 நவ., 2026, 12:37 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
*திருச்சுழி அருகே அரசு டாஸ்மாக் கடையில் காலியான மதுபான பாட்டில்களை ஊழியர்கள் திரும்பப் பெறாததால் மது பிரியர்கள் வாக்குவாதம்*
தமிழகம் முழுவதும் இன்று அரசு மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்கள் காலியான பின்பு மீண்டும் பெறும் திட்டத்தின் படி காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெற்றுக் கொண்டு பத்து ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கல்லூரணி பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மதுபான பாட்டில்கள் வாங்கிய நபர்கள் காலி மதுபான பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் பொழுது விற்பனையாளர் காலியான மதுபான பாட்டில்களை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் விற்பனையாளர் தன்னால் வாங்க முடியாது எனவும், ஸ்கேன் செய்து பாட்டில்களை வாங்குவதற்குரிய இயந்திரம் வரவில்லை என்று கூறியதை அடுத்து விற்பனையாளரிடம் மதுப் பிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.








