நாமக்கல்லில் தமிழ்நாடு சிலம்பாட்டம் கழகம் சார்பில் மாநில அளவிலான 42-வது ஆண்டு சிலம்பாட்டம் போட்டி கோலாகலமாகத் தொடங்கியது. இப்போட்டியைத் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், சைத்ரா அறக்கட்டளை குழுமத்தின் தலைவருமான பிரதீப்குமார் தொடங்கி வைத்தார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் சென்னை, திருச்சி, மதுரை, விழுப்புரம், திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளான இன்று பெண்களுக்கான தனிநபர் மற்றும் சண்டைப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற வீராங்கனைகள் தங்களது திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தினர். ஞாயிற்றுக்கிழமை ஆண்களுக்கான போட்டிகள் நடைபெற உள்ளன. வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்குக் கோப்பைகளும், பரிசுத் தொகைகளும் வழங்கப்படவுள்ளன. போட்டிகளைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதீப்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மூாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரியக் கலையான சிலம்பத்தை ஊக்குவிக்கும் வகையில் இப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்றைய நவீன காலத்தில் செல்போன் பயன்பாட்டில் மூழ்கியுள்ள மாணவர்களை மீட்டு, அவர்களின் உடல் வலிமையையும் தைரியத்தையும் மேம்படுத்தும் நோக்கில் எங்களது நிறுவனம் இதற்கான ஆதரவை (ஸ்பான்சர்ஷிப்) வழங்கி வருகிறது. தமிழக முதல்வர் விஜய் அவர்கள் விளையாட்டுத் துறைக்கு அளித்து வரும் ஊக்கமும், இளைஞர்களை அவர் மேம்படுத்தும் விதம் தான் எங்களைப் போன்றவர்களுக்கு இதுபோன்ற போட்டிகளை நடத்தப் பெரும் உத்வேகமாக உள்ளது. இத்தகைய போட்டிகளில் இளைஞர்கள் பங்கேற்பதன் மூலம் அவர்களின் தன்னம்பிக்கையும் உடல் வலிமையும் பன்மடங்கு பெருகும்" என்றார்.
நகரங்கள்
மாநில அளவிலான 42-வது ஆண்டு சிலம்பாட்டம் போட்டி தொடக்கம்!
🕒 27 நவ., 2026, 10:38 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
✨
AI Highlights
- •நாமக்கல்லில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களின் பங்கேற்புடன் மாநில அளவிலான 42-வது ஆண்டு சிலம்பாட்டம் போட்டி தொடங்கியது. தனியார் நிறுவன இயக்குநர் பிரதீப்குமார் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








