ஈரோடு சோலார் பகுதியில் பயன்பாட்டுக்கு வராமல் உள்ள பேருந்து நிலையத்தை தமிழக கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய் பாலாஜி, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பேச்சுவார்த்தை நடத்தி சோலார் பேருந்து நிலையம் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தயாரிக்கப்படும் விலையில்லா வேஷ்டி மற்றும் சேலை உற்பத்தி பணிகள் தற்போது 50 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளதாகக் கூறினார். உற்பத்திப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக, வழக்கமான காலக்கெடுவுடன் கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் எனவும், திட்டமிட்டபடி பொங்கல் பண்டிகைக்கு நியாய விலைக் கடைகள் மூலம் வேஷ்டி, சேலைகள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
நகரங்கள்
விலையில்லா வேஷ்டி சேலை உற்பத்திக்கு கூடுதலாக 15 நாட்கள் அவகாசம்: அமைச்சர் விஜய் பாலாஜி அறிவிப்பு
🕒 27 நவ., 2026, 11:52 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
✨
AI Highlights
- •விலையில்லா வேஷ்டி சேலை உற்பத்திக்கு கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி ஈரோட்டில் தெரிவித்தார்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








