Settings

முகப்பு/செய்திகள்/ரீல்ஸ் மோகம் தந்த விபரீதம்: பைக் சாகசம் செய்த வாலிபர் கைது, கையில் மாவுக்கட்டு
செய்திகள்

ரீல்ஸ் மோகம் தந்த விபரீதம்: பைக் சாகசம் செய்த வாலிபர் கைது, கையில் மாவுக்கட்டு

🕒 27 நவ., 2026, 12:32 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ரீல்ஸ் மோகம் தந்த விபரீதம்: பைக் சாகசம் செய்த வாலிபர் கைது, கையில் மாவுக்கட்டு - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •தூத்துக்குடியில் பைக் சாகசம் செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். சாகசத்தின்போது கீழே விழுந்து கை முறிந்த நிலையில், அவர் மூலமாகவே விழிப்புணர்வு வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சேர்ந்தவர் கமலேஷ் (20). இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபட்டு, அதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் பதிவிட்டு வந்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து, தூத்துக்குடி வடபாகம் காவல் துறை ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பைக் பதிவு எண்ணைக் கொண்டு சாகசத்தில் ஈடுபட்ட கமலேஷை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யும்போது கமலேஷின் கையில் மாவுக்கட்டு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக சாகசம் செய்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தனது இடது கை முறிந்துவிட்டதாக அவர் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, இளைஞர்கள் யாரும் இதுபோன்ற ஆபத்தான பைக் சாகசங்களில் ஈடுபட்டு தங்களதுயிரையும் உடலையும் ஆபத்தில் ஆழ்த்த வேண்டாம் என்றும், சாகசம் செய்ய முயற்சித்தபோது தனது கை முறிந்ததாகவும் கமலேஷ் தெரிவிக்கும் விழிப்புணர்வு வீடியோவை காவல் துறை வெளியிட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
விவசாய நிலங்களை அழிக்கக் கூடாது! ஈரோட்டில் கல் குவாரிக்கு எதிராக திரண்ட மக்கள்!செய்திகள்

விவசாய நிலங்களை அழிக்கக் கூடாது! ஈரோட்டில் கல் குவாரிக்கு எதிராக திரண்ட மக்கள்!

Dinesh🕒 நவ. 27
போதைப்பொருள் இல்லாத ராமநாதபுரம்: எஸ்பி ஹரி கிரன் பிரசாத் தீவிர முன்னெடுப்பு!செய்திகள்

போதைப்பொருள் இல்லாத ராமநாதபுரம்: எஸ்பி ஹரி கிரன் பிரசாத் தீவிர முன்னெடுப்பு!

MATHANRAJ🕒 நவ. 27
வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்: திருப்பத்தூரில் அதிரடியாக களமிறங்கிய தவெக!செய்திகள்

வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்: திருப்பத்தூரில் அதிரடியாக களமிறங்கிய தவெக!

ARAVINDHAN🕒 நவ. 27
விலையில்லா வேஷ்டி சேலை உற்பத்திக்கு கூடுதலாக 15 நாட்கள் அவகாசம்: அமைச்சர் விஜய் பாலாஜி அறிவிப்புநகரங்கள்

விலையில்லா வேஷ்டி சேலை உற்பத்திக்கு கூடுதலாக 15 நாட்கள் அவகாசம்: அமைச்சர் விஜய் பாலாஜி அறிவிப்பு

Dinesh🕒 நவ. 27
மக்களே உஷார்! குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த 10 அடி மலைப்பாம்பு - திகில் சம்பவம்!செய்திகள்

மக்களே உஷார்! குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த 10 அடி மலைப்பாம்பு - திகில் சம்பவம்!

Ramkumarsamy🕒 நவ. 27
தனியார் பள்ளியில் சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!செய்திகள்

தனியார் பள்ளியில் சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Dinesh🕒 நவ. 27
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிப்பு!தமிழ்நாடு

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிப்பு!

SRIDHAR🕒 நவ. 27
அரசு நில ஆக்கிரமிப்பு விவகாரம்: பரமத்திவேலூரில் கொந்தளித்த பொதுமக்கள் - போலீஸ் குவிப்பு!செய்திகள்

அரசு நில ஆக்கிரமிப்பு விவகாரம்: பரமத்திவேலூரில் கொந்தளித்த பொதுமக்கள் - போலீஸ் குவிப்பு!

SRIDHAR🕒 நவ. 27
TNO வாட்ஸ்அப் சானல் ➔