Settings

முகப்பு/செய்திகள்/விளாத்திகுளத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கான நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே காசநோய் முகாம்!
செய்திகள்

விளாத்திகுளத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கான நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே காசநோய் முகாம்!

🕒 27 நவ., 2026, 12:37 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
விளாத்திகுளத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கான நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே காசநோய் முகாம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தூய்மைப் பணியாளர்களுக்காக நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் தீவிர காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தூத்துக்குடி மாவட்டத் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் மற்றும் பேரிலோவன்பட்டி காசநோய் பிரிவு சார்பில், விளாத்திகுளம் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கான நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் (MDU ACF) மூலம் தீவிர காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமில், தொடக்கமாக அனைவரும் காசநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு முகாமை விளாத்திகுளம் பேரூராட்சித் தலைவர் அயன்ராஜ் மற்றும் துணைத் தலைவர் வேல்ச்சாமி ஆகியோர் தலைமை தாங்கித் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தூய்மைப் பணியாளர்களுக்குக் காசநோய் விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பேரூராட்சிச் செயல் அலுவலர் சுப்பிரமணியன் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.

இம்முகாமில் நடமாடும் மருத்துவக் குழு மருத்துவ அலுவலர் சுபலட்சுமி, வட்டாரச் சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம், சுகாதார ஆய்வாளர் ராஜபிரியன், பேரூராட்சி அலுவலர்கள், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் கணேசமூர்த்தி, சுகாதாரப் பார்வையாளர் அமுதா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும், நடமாடும் மருத்துவக் குழுவினர் மற்றும் பேரிலோவன்பட்டி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து MLHP மற்றும் WHV பணியாளர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் இந்த முகாமில் ஆர்வமுடன் பங்கேற்று காசநோய் பரிசோதனை செய்து கொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
விவசாய நிலங்களை அழிக்கக் கூடாது! ஈரோட்டில் கல் குவாரிக்கு எதிராக திரண்ட மக்கள்!செய்திகள்

விவசாய நிலங்களை அழிக்கக் கூடாது! ஈரோட்டில் கல் குவாரிக்கு எதிராக திரண்ட மக்கள்!

Dinesh🕒 நவ. 27
போதைப்பொருள் இல்லாத ராமநாதபுரம்: எஸ்பி ஹரி கிரன் பிரசாத் தீவிர முன்னெடுப்பு!செய்திகள்

போதைப்பொருள் இல்லாத ராமநாதபுரம்: எஸ்பி ஹரி கிரன் பிரசாத் தீவிர முன்னெடுப்பு!

MATHANRAJ🕒 நவ. 27
வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்: திருப்பத்தூரில் அதிரடியாக களமிறங்கிய தவெக!செய்திகள்

வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்: திருப்பத்தூரில் அதிரடியாக களமிறங்கிய தவெக!

ARAVINDHAN🕒 நவ. 27
விலையில்லா வேஷ்டி சேலை உற்பத்திக்கு கூடுதலாக 15 நாட்கள் அவகாசம்: அமைச்சர் விஜய் பாலாஜி அறிவிப்புநகரங்கள்

விலையில்லா வேஷ்டி சேலை உற்பத்திக்கு கூடுதலாக 15 நாட்கள் அவகாசம்: அமைச்சர் விஜய் பாலாஜி அறிவிப்பு

Dinesh🕒 நவ. 27
மக்களே உஷார்! குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த 10 அடி மலைப்பாம்பு - திகில் சம்பவம்!செய்திகள்

மக்களே உஷார்! குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த 10 அடி மலைப்பாம்பு - திகில் சம்பவம்!

Ramkumarsamy🕒 நவ. 27
தனியார் பள்ளியில் சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!செய்திகள்

தனியார் பள்ளியில் சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Dinesh🕒 நவ. 27
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிப்பு!தமிழ்நாடு

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிப்பு!

SRIDHAR🕒 நவ. 27
அரசு நில ஆக்கிரமிப்பு விவகாரம்: பரமத்திவேலூரில் கொந்தளித்த பொதுமக்கள் - போலீஸ் குவிப்பு!செய்திகள்

அரசு நில ஆக்கிரமிப்பு விவகாரம்: பரமத்திவேலூரில் கொந்தளித்த பொதுமக்கள் - போலீஸ் குவிப்பு!

SRIDHAR🕒 நவ. 27
TNO வாட்ஸ்அப் சானல் ➔