Settings

முகப்பு/நகரங்கள்/100 நிமிடங்களில் 1,000 பெண் தையல் கலைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி - திருச்சியில் நாளை நடைபெறுகிறது!
நகரங்கள்

100 நிமிடங்களில் 1,000 பெண் தையல் கலைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி - திருச்சியில் நாளை நடைபெறுகிறது!

🕒 28 நவ., 2026, 03:55 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
100 நிமிடங்களில் 1,000 பெண் தையல் கலைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி -  திருச்சியில் நாளை நடைபெறுகிறது! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •100 நிமிடங்களில் 1,000 பெண் தையல் கலைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி - திருச்சியில் நாளை நடைபெறுகிறது!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

பெண்களின் கைத்திறனையும் தன்னம்பிக்கையையும் உலகறியச் செய்யும் வகையில், 'மகளிர் தையல் கலைஞர்கள் கூட்டமைப்பு' (Women Tailors Federation) சார்பில் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற உள்ளது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு திருச்சி அண்ணாமலை நகர் பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் தலைவி பாமா கணேசன், செயலாளர் சுதா பிரபாகரன், பொருளாளர் சகி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பெண்களுக்கு தையல் திறனையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில், 100 நிமிடங்களில் 1,000-க்கும் மேற்பட்ட பெண் தையல் கலைஞர்கள் பங்கேற்றுப் பல்வேறு வகையிலான ஆடைகளைத் தயாரிக்கும் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி, திருச்சி தூய வளனார் கல்லூரியில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் பல்வேறு முக்கியஸ்தர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ள உள்ளனர். பெண் தையல் கலைஞர்களின் திறமைகளை அங்கீகரித்தல், அரசு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இலவசப் பயிற்சி அளித்தல் மற்றும் பெண்களை தொழில்முனைவோர்களாக உருவாக்குதல் ஆகிய உயரிய நோக்கங்களுக்காக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிகழ்வில் பங்கேற்பதற்கு எவ்விதக் கட்டணமும் கிடையாது. மேலும், தையல் கலைஞர்களுக்குத் தேவையான துணி மற்றும் அனைத்து உபகரணங்களும் இலவசமாகவே வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் நலவாரிய அட்டை மற்றும் உலக சாதனை நிகழ்வில் பங்கேற்றதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. குறிப்பாக, இந்த 100 நிமிடங்களில் தையல் கலைஞர்களால் உருவாக்கப்படும் அனைத்து ஆடைகளும் அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன என தெரிவித்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
காவலர்கள் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் - திருப்பத்தூர் எஸ்பி அதிரடி உத்தரவு!நகரங்கள்

காவலர்கள் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் - திருப்பத்தூர் எஸ்பி அதிரடி உத்தரவு!

ARAVINDHAN🕒 நவ. 28
வெடிபொருட்களைக் கொண்டு பாறைகளை நொறுக்கும் ஓ.என்.ஜி.சி: அதிர்ச்சியில் உறைந்த காவிரிப் படுகை மக்கள்!நகரங்கள்

வெடிபொருட்களைக் கொண்டு பாறைகளை நொறுக்கும் ஓ.என்.ஜி.சி: அதிர்ச்சியில் உறைந்த காவிரிப் படுகை மக்கள்!

SASHVI🕒 நவ. 28
மணப்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு சிபிஐ (எம்.எல்) போராட்டம் வாபஸ்!நகரங்கள்

மணப்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு சிபிஐ (எம்.எல்) போராட்டம் வாபஸ்!

Ramachandran🕒 நவ. 28
பள்ளிகொண்டா தீயணைப்பு நிலையத்தில் புதிய அலுவலர் பொறுப்பேற்புநகரங்கள்

பள்ளிகொண்டா தீயணைப்பு நிலையத்தில் புதிய அலுவலர் பொறுப்பேற்பு

Srinivasan🕒 நவ. 28
ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஐந்து பேர் படுகாயம்செய்திகள்

ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஐந்து பேர் படுகாயம்

Dinesh🕒 நவ. 28
ஜே.எம்.1 நீதிபதியின் வாகனத்தை தூக்கி ஓரமாக நிறுத்திய பவுன்சர்கள்அரசியல்

ஜே.எம்.1 நீதிபதியின் வாகனத்தை தூக்கி ஓரமாக நிறுத்திய பவுன்சர்கள்

Srinivasan🕒 நவ. 28
திருப்பரங்குன்றம் உச்சியில் தீபம் தயார்.செய்திகள்

திருப்பரங்குன்றம் உச்சியில் தீபம் தயார்.

Vijay🕒 நவ. 28
திருநெல்வேலி சமாதானபுரம் சாலையில் குளம்போல் தேங்கும் மழைநீர்: தொற்றுநோய் பரவும் அபாயத்தால் மக்கள் அவதிசெய்திகள்

திருநெல்வேலி சமாதானபுரம் சாலையில் குளம்போல் தேங்கும் மழைநீர்: தொற்றுநோய் பரவும் அபாயத்தால் மக்கள் அவதி

Vijayaragavan🕒 நவ. 28
TNO வாட்ஸ்அப் சானல் ➔