திருநெல்வேலி மாநகரப் பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காலை முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. கேடிசி நகர், பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, கொக்கிர குளம் திருநெல்வேலி சந்திப்பு மற்றும் திருநெல்வேலி டவுன் ஆகிய இடங்களில் காலை நேரத்திலிருந்தே மழை நீடித்து வருகிறது. அதேபோல் மாவட்டத்தின் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கல்லூர் மற்றும் மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது. தற்போது மாவட்டத்தின் பல பகுதிகளில் 30 நிமிடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளது மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மழை நீடித்து வருவதால், அணைகள் மற்றும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து உயர வாய்ப்புள்ளது
நகரங்கள்
திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது!
🕒 28 நவ., 2026, 06:36 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨
AI Highlights
- •திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








