திருநெல்வேலி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மாநகரின் தாழ்வான பகுதிகளிலும், முக்கியச் சாலைகளிலும் மழைநீர் வடிய வழியின்றித் தேங்கி நிற்கிறது. குறிப்பாக, சமாதானபுரம் பகுதியில் இருந்து திருநெல்வேலி டவுன் செல்லும் பிரதான சாலையில் சாதாரண மழை பெய்தாலே மழைநீர் குளம்போல் தேங்கி விடுவதாகவும், அந்தத் தண்ணீர் வடிவதற்குப் பல மணி நேரம் ஆவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சாலையில் நீண்ட நேரம் தேங்கி நிற்கும் மழைநீரால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் தினந்தோறும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், மழைநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் கொசு உற்பத்தி அதிகரித்து, டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், தற்போது ஐயப்பன் மற்றும் முருகன் கோயில்களுக்குச் செல்ல மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் பலர் வெறுங்காலுடன் இந்தச் சேறும் சகதியுமான மழைநீரில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இது பக்தர்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது எனத் தெரிவித்தனர். சுகாதாரத் துறை சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று மருந்து தெளிக்கும் பணியும், காய்ச்சல் ஆய்வுப் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருவது வரவேற்கத்தக்க நிகழ்வுதான். இருப்பினும், நோய்த் தடுப்புப் பணிகள் முழுமையடைய வேண்டுமென்றால் சாலையில் தேங்கிக் கிடக்கும் மழைநீரை அகற்றுவது மிகவும் அவசியம். எனவே, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, சமாதானபுரம் சாலையில் மழைநீர் தேங்காத வண்ணம் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள்
திருநெல்வேலி சமாதானபுரம் சாலையில் குளம்போல் தேங்கும் மழைநீர்: தொற்றுநோய் பரவும் அபாயத்தால் மக்கள் அவதி
🕒 28 நவ., 2026, 10:28 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 3
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (3)படத்தைத் தொடவும்
✨
AI Highlights
- •திருநெல்வேலி சமாதானபுரம் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்குவதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அவதி. மாநகராட்சி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








