Settings

முகப்பு/நகரங்கள்/பாலாற்றில் குப்பைகள் கொட்டப்படுவதாக புகார்: மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மற்றும் அதிரடி உத்தரவு!
நகரங்கள்

பாலாற்றில் குப்பைகள் கொட்டப்படுவதாக புகார்: மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மற்றும் அதிரடி உத்தரவு!

🕒 28 நவ., 2026, 07:09 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பாலாற்றில் குப்பைகள் கொட்டப்படுவதாக புகார்: மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மற்றும் அதிரடி உத்தரவு! - படம் 1 - The News Outlook
📸1 / 3
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (3)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பாலாற்றில் குப்பைகள் கொட்டப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் நேரில் ஆய்வு செய்து உடனடியாக தடுத்து நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஜாப்ராபாத் உள்ளிட்ட சுற்றுவட்டார ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் பாலாற்றில் கொட்டப்படுவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதனால் பாலாற்றில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், விவசாயமும் பெருமளவில் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் நல்லசிவன், பாலாற்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆற்றில் அதிகளவில் குப்பைகள் தேங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலரை செல்போனில் தொடர்புகொண்ட மாவட்ட ஆட்சியர், பாலாற்றில் குப்பைகள் கொட்டுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், குப்பைகளைக் கொட்டுவதற்கு மாற்று இடத்தைத் தேர்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார். பாலாற்றில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்திருப்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
வெடிபொருட்களைக் கொண்டு பாறைகளை நொறுக்கும் ஓ.என்.ஜி.சி: அதிர்ச்சியில் உறைந்த காவிரிப் படுகை மக்கள்!நகரங்கள்

வெடிபொருட்களைக் கொண்டு பாறைகளை நொறுக்கும் ஓ.என்.ஜி.சி: அதிர்ச்சியில் உறைந்த காவிரிப் படுகை மக்கள்!

SASHVI🕒 நவ. 28
மணப்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு சிபிஐ (எம்.எல்) போராட்டம் வாபஸ்!நகரங்கள்

மணப்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு சிபிஐ (எம்.எல்) போராட்டம் வாபஸ்!

Ramachandran🕒 நவ. 28
பள்ளிகொண்டா தீயணைப்பு நிலையத்தில் புதிய அலுவலர் பொறுப்பேற்புநகரங்கள்

பள்ளிகொண்டா தீயணைப்பு நிலையத்தில் புதிய அலுவலர் பொறுப்பேற்பு

Srinivasan🕒 நவ. 28
100 நிமிடங்களில் 1,000 பெண் தையல் கலைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி -  திருச்சியில் நாளை நடைபெறுகிறது!நகரங்கள்

100 நிமிடங்களில் 1,000 பெண் தையல் கலைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி - திருச்சியில் நாளை நடைபெறுகிறது!

MSD🕒 நவ. 28
ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஐந்து பேர் படுகாயம்செய்திகள்

ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஐந்து பேர் படுகாயம்

Dinesh🕒 நவ. 28
ஜே.எம்.1 நீதிபதியின் வாகனத்தை தூக்கி ஓரமாக நிறுத்திய பவுன்சர்கள்அரசியல்

ஜே.எம்.1 நீதிபதியின் வாகனத்தை தூக்கி ஓரமாக நிறுத்திய பவுன்சர்கள்

Srinivasan🕒 நவ. 28
திருப்பரங்குன்றம் உச்சியில் தீபம் தயார்.செய்திகள்

திருப்பரங்குன்றம் உச்சியில் தீபம் தயார்.

Vijay🕒 நவ. 28
திருநெல்வேலி சமாதானபுரம் சாலையில் குளம்போல் தேங்கும் மழைநீர்: தொற்றுநோய் பரவும் அபாயத்தால் மக்கள் அவதிசெய்திகள்

திருநெல்வேலி சமாதானபுரம் சாலையில் குளம்போல் தேங்கும் மழைநீர்: தொற்றுநோய் பரவும் அபாயத்தால் மக்கள் அவதி

Vijayaragavan🕒 நவ. 28
TNO வாட்ஸ்அப் சானல் ➔