Settings

முகப்பு/நகரங்கள்/பாலாறு பாசனக் கால்வாய் தூர்வாரும் பணி தொடக்கம்!
நகரங்கள்

பாலாறு பாசனக் கால்வாய் தூர்வாரும் பணி தொடக்கம்!

🕒 28 நவ., 2026, 06:14 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பாலாறு பாசனக் கால்வாய் தூர்வாரும் பணி தொடக்கம்! - படம் 1 - The News Outlook
📸1 / 3
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (3)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 2.5 கி.மீ தூர பாலாறு பாசனக் கால்வாய் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜாப்ராபாத் பகுதியில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த பாலாறு நீர்ப்பாசனக் கால்வாயை தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஜாப்ராபாத் ஊராட்சி முதல் மேட்டுப்பாளையம் வழியாக உதயேந்திரம் பேரூராட்சி வரை செல்லும் இந்தக் கால்வாய் முறையாகப் பராமரிக்கப்படாததால், உதயேந்திரம் பேரூராட்சிப் பகுதியில் உள்ள சுமார் 360 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரிக்கு நீர்வரத்து தடைப்பட்டு, ஏரி முழுமையாக நிரம்பாமல் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம் மற்றும் விவசாயிகள் சார்பில் கால்வாயைத் தூர்வாரி, ஏரி மற்றும் நீர்ப்பாசனக் கால்வாய்களை முறையாகப் பராமரிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மனுக்கள் அளிக்கப்பட்டன. இதன் எதிரொலியாக, சுமார் 2.5 கிலோமீட்டர் தூரம் கொண்ட பாசனக் கால்வாயைத் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் நல்ல சிவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நீண்டகாலமாகத் தூர்வாரப்படாமல் இருந்த கால்வாயைச் சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளதால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், கால்வாய் தூர்வாரும் பணியை விரைந்து முடித்து ஏரிக்கு நீர்வரத்தை உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
வெடிபொருட்களைக் கொண்டு பாறைகளை நொறுக்கும் ஓ.என்.ஜி.சி: அதிர்ச்சியில் உறைந்த காவிரிப் படுகை மக்கள்!நகரங்கள்

வெடிபொருட்களைக் கொண்டு பாறைகளை நொறுக்கும் ஓ.என்.ஜி.சி: அதிர்ச்சியில் உறைந்த காவிரிப் படுகை மக்கள்!

SASHVI🕒 நவ. 28
மணப்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு சிபிஐ (எம்.எல்) போராட்டம் வாபஸ்!நகரங்கள்

மணப்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு சிபிஐ (எம்.எல்) போராட்டம் வாபஸ்!

Ramachandran🕒 நவ. 28
பள்ளிகொண்டா தீயணைப்பு நிலையத்தில் புதிய அலுவலர் பொறுப்பேற்புநகரங்கள்

பள்ளிகொண்டா தீயணைப்பு நிலையத்தில் புதிய அலுவலர் பொறுப்பேற்பு

Srinivasan🕒 நவ. 28
100 நிமிடங்களில் 1,000 பெண் தையல் கலைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி -  திருச்சியில் நாளை நடைபெறுகிறது!நகரங்கள்

100 நிமிடங்களில் 1,000 பெண் தையல் கலைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி - திருச்சியில் நாளை நடைபெறுகிறது!

MSD🕒 நவ. 28
ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஐந்து பேர் படுகாயம்செய்திகள்

ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஐந்து பேர் படுகாயம்

Dinesh🕒 நவ. 28
ஜே.எம்.1 நீதிபதியின் வாகனத்தை தூக்கி ஓரமாக நிறுத்திய பவுன்சர்கள்அரசியல்

ஜே.எம்.1 நீதிபதியின் வாகனத்தை தூக்கி ஓரமாக நிறுத்திய பவுன்சர்கள்

Srinivasan🕒 நவ. 28
திருப்பரங்குன்றம் உச்சியில் தீபம் தயார்.செய்திகள்

திருப்பரங்குன்றம் உச்சியில் தீபம் தயார்.

Vijay🕒 நவ. 28
திருநெல்வேலி சமாதானபுரம் சாலையில் குளம்போல் தேங்கும் மழைநீர்: தொற்றுநோய் பரவும் அபாயத்தால் மக்கள் அவதிசெய்திகள்

திருநெல்வேலி சமாதானபுரம் சாலையில் குளம்போல் தேங்கும் மழைநீர்: தொற்றுநோய் பரவும் அபாயத்தால் மக்கள் அவதி

Vijayaragavan🕒 நவ. 28
TNO வாட்ஸ்அப் சானல் ➔