Settings

முகப்பு/நகரங்கள்/வீட்டு வசதி வாரிய நிலுவைத் தொகைக்கு வட்டித் தள்ளுபடி சலுகை அறிவிப்பு!
நகரங்கள்

வீட்டு வசதி வாரிய நிலுவைத் தொகைக்கு வட்டித் தள்ளுபடி சலுகை அறிவிப்பு!

🕒 28 நவ., 2026, 09:12 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
வீட்டு வசதி வாரிய நிலுவைத் தொகைக்கு வட்டித் தள்ளுபடி சலுகை அறிவிப்பு! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் திட்டங்களில் நிலுவைத் தொகையை ஒரே தவணையில் செலுத்தும் பயனாளிகளுக்கு வட்டித் தள்ளுபடி சலுகைகளை நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் :- மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களால் 28.08.2026 அன்று அறிவிக்கப்பட்ட வட்டித் தள்ளுபடி திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு அரசாணை (நிலை) எண்.204, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, நாள்.11.11.2026ன்படி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் திட்டங்களில் வீடு/மனை/அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய அலகுகளை ஒதுக்கீடு பெற்றவர்களில், 31.03.2026-க்கு முன்பு தவணைக்காலம் முடிவுற்ற இனங்களில், வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை தாமாக முன்வந்து ஒரே தவணையில் முழுமையாக செலுத்தும் பயனாளிகளுக்கு கீழ்க்கண்ட வட்டித் தள்ளுபடி சலுகைள் அறிவிக்கப்பட்டுள்ளது.

1. மாதத் தவணையை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

2. வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

3. நிலத்திற்கான இறுதி விலை வித்தியாசத் தொகையின் மீது விதிக்கப்படும் வட்டியில், ஒவ்வொரு ஆண்டிற்கும் 5 மாதங்களுக்கான வட்டி, தள்ளுபடி செய்யப்படும். மேற்கண்ட இச்சலுகையை அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஓராண்டு காலத்திற்கு மட்டுமே நடப்பில் இருக்கும் என்றும், அதற்கு பின்னர் கால நீட்டிப்பு செய்யப்படமட்டாது எனவும், ஒதுக்கீடுதாரர்கள் தாம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை முழுமையாக ஒரே தவணையில் செலுத்த வேண்டும் எனவும், அரசின் இந்த வட்டித் தள்ளுபடி சலுகையானது ஏற்கனவே நடப்பில் உள்ள ஒதுக்கீடுதாரர்களுக்கு அதாவது தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திட்டங்களில் வீடு, மனை, அடுக்கு மாடி குடியிருப்புகள் ஆகிய அலகுகளில் 31.03.2026க்கு முன்பு தவணைக்காலம் முடிவுற்ற குடியிருப்பு இனங்களுக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. எனவே அனைத்து தகுதியுள்ள ஒதுக்கீடுதாரர்களும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி உடனடியாக விற்பனை பத்திரம் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
வெடிபொருட்களைக் கொண்டு பாறைகளை நொறுக்கும் ஓ.என்.ஜி.சி: அதிர்ச்சியில் உறைந்த காவிரிப் படுகை மக்கள்!நகரங்கள்

வெடிபொருட்களைக் கொண்டு பாறைகளை நொறுக்கும் ஓ.என்.ஜி.சி: அதிர்ச்சியில் உறைந்த காவிரிப் படுகை மக்கள்!

SASHVI🕒 நவ. 28
மணப்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு சிபிஐ (எம்.எல்) போராட்டம் வாபஸ்!நகரங்கள்

மணப்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு சிபிஐ (எம்.எல்) போராட்டம் வாபஸ்!

Ramachandran🕒 நவ. 28
பள்ளிகொண்டா தீயணைப்பு நிலையத்தில் புதிய அலுவலர் பொறுப்பேற்புநகரங்கள்

பள்ளிகொண்டா தீயணைப்பு நிலையத்தில் புதிய அலுவலர் பொறுப்பேற்பு

Srinivasan🕒 நவ. 28
100 நிமிடங்களில் 1,000 பெண் தையல் கலைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி -  திருச்சியில் நாளை நடைபெறுகிறது!நகரங்கள்

100 நிமிடங்களில் 1,000 பெண் தையல் கலைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி - திருச்சியில் நாளை நடைபெறுகிறது!

MSD🕒 நவ. 28
ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஐந்து பேர் படுகாயம்செய்திகள்

ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஐந்து பேர் படுகாயம்

Dinesh🕒 நவ. 28
ஜே.எம்.1 நீதிபதியின் வாகனத்தை தூக்கி ஓரமாக நிறுத்திய பவுன்சர்கள்அரசியல்

ஜே.எம்.1 நீதிபதியின் வாகனத்தை தூக்கி ஓரமாக நிறுத்திய பவுன்சர்கள்

Srinivasan🕒 நவ. 28
திருப்பரங்குன்றம் உச்சியில் தீபம் தயார்.செய்திகள்

திருப்பரங்குன்றம் உச்சியில் தீபம் தயார்.

Vijay🕒 நவ. 28
திருநெல்வேலி சமாதானபுரம் சாலையில் குளம்போல் தேங்கும் மழைநீர்: தொற்றுநோய் பரவும் அபாயத்தால் மக்கள் அவதிசெய்திகள்

திருநெல்வேலி சமாதானபுரம் சாலையில் குளம்போல் தேங்கும் மழைநீர்: தொற்றுநோய் பரவும் அபாயத்தால் மக்கள் அவதி

Vijayaragavan🕒 நவ. 28
TNO வாட்ஸ்அப் சானல் ➔