Settings

முகப்பு/அரசியல்/ரூ.4.25 கோடியில் புதிய சேமிப்புக் கிடங்கு திறப்பு; அமைச்சர்கள் ஆய்வு
அரசியல்

ரூ.4.25 கோடியில் புதிய சேமிப்புக் கிடங்கு திறப்பு; அமைச்சர்கள் ஆய்வு

🕒 28 நவ., 2026, 09:18 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ரூ.4.25 கோடியில் புதிய சேமிப்புக் கிடங்கு திறப்பு; அமைச்சர்கள் ஆய்வு - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •நெல்லை அம்பாசமுத்திரத்தில் ரூ.4.25 கோடியில் புதிய சேமிப்புக் கிடங்கை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். தொகுதி மறுவரையறை குறித்த கேள்விக்கு அமைச்சர் மழுப்பலாகப் பதிலளித்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் விவசாயிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு ரூ.4.25 கோடி மதிப்பீட்டில் 3.400 மெ.டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் சேமிப்பு கிடங்கு புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட ரமணன் மற்றும் நிதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் நெல்லை எம்பி ராபர்ட் புரூஸ் ஆகியோர் திறந்து வைத்தனர். தொடர்ந்து சேமிப்பு கிடங்கில் அரிசியின் தரத்தை பரிசோதிக்கும் நவீன இயந்திரத்தை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த கிடங்கு அமைந்துள்ளதால் சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு வரப்படும் உரங்கள் மற்றும் தானியங்களை விரைவாக இறக்கிச் சேமிப்பதற்கும் பிற பகுதிகளுக்கு அனுப்புவதற்கும் எளிதாக இருக்கும். இந்த புதிய கிடங்கு மூலம் அறுவடைக் காலங்களில் சந்தையில் விலை குறைவாக இருக்கும்போது, சேமிப்பு வசதியில்லாத காரணத்தால் விவசாயிகள் குறைந்த விலைக்கு விளைபொருட்களை விற்பதைத் தடுத்து, சந்தையில் நல்ல விலை கிடைக்கும் வரை இருப்பு வைத்து அதிக வாபம் ஈட்டமுடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிகழ்ச்சிக்குப் பின் அமைச்சர் வெங்கட் ரமணனிடம் தொகுதி மறு வரையறை மசோதோவுக்கு திமுக ஆதரவு தெரிவித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது பணிகளை முடித்துவிட்டு அப்புறம் பேசுகிறேன் என மழுப்பலாக அமைச்சர் பதில் அளித்தார் தொடர்ந்து அமைச்சர்கள் இருவரும் அம்பாசமுத்திரம் அருகே ஊர்க்காடு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் குழந்தைகளுடன் அமைச்சர்கள் உரையாடினர் மேலும் அமைச்சர் வெங்கட்ரமணன் குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து உணவருந்தினார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு விவகாரம் - திருப்பத்தூரில் கொந்தளித்த விசிக!அரசியல்

தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு விவகாரம் - திருப்பத்தூரில் கொந்தளித்த விசிக!

ARAVINDHAN🕒 நவ. 28
உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: முருகன் சன்னதியில் தீபம் ஏற்றி பாஜகவினர் கொண்டாட்டம்!அரசியல்

உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: முருகன் சன்னதியில் தீபம் ஏற்றி பாஜகவினர் கொண்டாட்டம்!

Sugumaran🕒 நவ. 28
தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் 2027 காலண்டர் வெளியீடு!அரசியல்

தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் 2027 காலண்டர் வெளியீடு!

Dinesh🕒 நவ. 28
தமிழக அரசு இந்து விரோத சக்தியாக செயல்படுகிறது: முதலமைச்சர் விஜய் மீது ஹெச்.ராஜா கடும் தாக்குஅரசியல்

தமிழக அரசு இந்து விரோத சக்தியாக செயல்படுகிறது: முதலமைச்சர் விஜய் மீது ஹெச்.ராஜா கடும் தாக்கு

MSD🕒 நவ. 28
ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஐந்து பேர் படுகாயம்செய்திகள்

ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஐந்து பேர் படுகாயம்

Dinesh🕒 நவ. 28
திருப்பரங்குன்றம் உச்சியில் தீபம் தயார்.செய்திகள்

திருப்பரங்குன்றம் உச்சியில் தீபம் தயார்.

Vijay🕒 நவ. 28
மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி!செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி!

SASHVI🕒 நவ. 28
விசிக ஆர்ப்பாட்டம்: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு!செய்திகள்

விசிக ஆர்ப்பாட்டம்: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு!

SASHVI🕒 நவ. 28
TNO வாட்ஸ்அப் சானல் ➔