நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவுரித்திடலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. நாகை சட்டமன்ற தொகுதி மாவட்டச் செயலாளர் சக்திவேல் தலைமையில் பெண்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். மத்திய அரசு நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தொகுதி எண்ணிக்கையை உயர்த்த கூடாது என்றும் , மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் நகர,ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்
அரசியல்
மத்திய அரசை கண்டித்து நாகையில் விசிகவினர் ஆர்ப்பாட்டம்: குவிந்த கட்சியினர்!
🕒 28 நவ., 2026, 08:15 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨
AI Highlights
- •தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து நாகப்பட்டினத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








