நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் வீதி லீடர்ஸ் பவுண்டேஷன் மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர். வீதி லீடர்ஸ் பவுண்டேஷனின் 100 நாள் மக்கள் நலத் திட்டமான வீடு தோறும் வீதி லீடர்ஸ் திட்டத்தின் கீழ், அஞ்சுகம் முத்துவேலர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இம்முகாம் நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொதுமக்களுக்கு கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட்டன. கண்புரை அறுவை சிகிச்சைக்குத் தேர்வு செய்யப்பட்ட 25க்கும் மேற்பட்டோர் உடனடியாக கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அறுவை சிகிச்சை, விழி லென்ஸ், உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து செலவுகளும் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், முகாமில் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் தன்னார்வத்துடன் பங்கேற்று பொதுமக்களின் பெயர் பதிவு மற்றும் வழிகாட்டுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர். இம்முகாம் மூலம் திருக்குவளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.
நகரங்கள்
கண் அறுவை சிகிச்சைக்கு கோவை அனுப்பப்பட்ட 25 பேர்: திருக்குவளையில் நெகிழ்ச்சி சம்பவம்!
🕒 28 நவ., 2026, 06:51 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨
AI Highlights
- •நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 500-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். கண்புரை அறுவை சிகிச்சைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








