Settings

முகப்பு/செய்திகள்/களத்தில் அதிரடி காட்ட தயாராகும் எடப்பாடி பழனிசாமி! கரூரில் நாளை மறுநாள் பிரம்மாண்ட நிர்வாகி சந்திப்பு!
செய்திகள்

களத்தில் அதிரடி காட்ட தயாராகும் எடப்பாடி பழனிசாமி! கரூரில் நாளை மறுநாள் பிரம்மாண்ட நிர்வாகி சந்திப்பு!

🕒 27 நவ., 2026, 12:21 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
களத்தில் அதிரடி காட்ட தயாராகும் எடப்பாடி பழனிசாமி! கரூரில் நாளை மறுநாள் பிரம்மாண்ட நிர்வாகி சந்திப்பு! - படம் 1 - The News Outlook
📸1 / 4
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (4)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஆயிரம் நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசிக்க உள்ளார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஆயிரம் நிர்வாகிகளை நேரில் சந்தித்து, கரூர் இடைத்தேர்தல் மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக மாவட்ட அதிமுக செயலாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

கரூரில் வரும் ஞாயிற்றுக்கிழமை அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அன்றைய தினம் காலை கரூர் வருகை தருகிறார். கரூர் - கோவை சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ள இக்கூட்டத்திற்கான இடத்தை, கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் கமலக்கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "தேர்தல் நேரங்களில் மட்டும் வந்து சென்ற அவர், தற்போது முதல் முறையாக நிர்வாகிகளை மட்டுமே சந்திப்பதற்காக வருவது தொண்டர்கள் மத்தியில் மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரவிருக்கும் கரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் அதிமுக கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆலோசனைகளை வழங்குவார். கூட்டத்திற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன" என்றார்.

மேலும், காவல்துறை சுட்டிக்காட்டியுள்ள வழிகாட்டுதல்களின்படி, பேனர்கள் வைப்பதில் உள்ள இடையூறுகள் சரிசெய்யப்பட்டு, பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பின் போது, அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் கரிகாலன், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.காமராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகளான சக்திவேல், என்.எஸ்.கிருஷ்ணன், வழக்கறிஞர் கலைராஜன், செல்வகுமார், செல்வி, பாத்திமா பீவி உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
விவசாய நிலங்களை அழிக்கக் கூடாது! ஈரோட்டில் கல் குவாரிக்கு எதிராக திரண்ட மக்கள்!செய்திகள்

விவசாய நிலங்களை அழிக்கக் கூடாது! ஈரோட்டில் கல் குவாரிக்கு எதிராக திரண்ட மக்கள்!

Dinesh🕒 நவ. 27
போதைப்பொருள் இல்லாத ராமநாதபுரம்: எஸ்பி ஹரி கிரன் பிரசாத் தீவிர முன்னெடுப்பு!செய்திகள்

போதைப்பொருள் இல்லாத ராமநாதபுரம்: எஸ்பி ஹரி கிரன் பிரசாத் தீவிர முன்னெடுப்பு!

MATHANRAJ🕒 நவ. 27
வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்: திருப்பத்தூரில் அதிரடியாக களமிறங்கிய தவெக!செய்திகள்

வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்: திருப்பத்தூரில் அதிரடியாக களமிறங்கிய தவெக!

ARAVINDHAN🕒 நவ. 27
விலையில்லா வேஷ்டி சேலை உற்பத்திக்கு கூடுதலாக 15 நாட்கள் அவகாசம்: அமைச்சர் விஜய் பாலாஜி அறிவிப்புநகரங்கள்

விலையில்லா வேஷ்டி சேலை உற்பத்திக்கு கூடுதலாக 15 நாட்கள் அவகாசம்: அமைச்சர் விஜய் பாலாஜி அறிவிப்பு

Dinesh🕒 நவ. 27
மக்களே உஷார்! குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த 10 அடி மலைப்பாம்பு - திகில் சம்பவம்!செய்திகள்

மக்களே உஷார்! குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த 10 அடி மலைப்பாம்பு - திகில் சம்பவம்!

Ramkumarsamy🕒 நவ. 27
தனியார் பள்ளியில் சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!செய்திகள்

தனியார் பள்ளியில் சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Dinesh🕒 நவ. 27
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிப்பு!தமிழ்நாடு

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிப்பு!

SRIDHAR🕒 நவ. 27
அரசு நில ஆக்கிரமிப்பு விவகாரம்: பரமத்திவேலூரில் கொந்தளித்த பொதுமக்கள் - போலீஸ் குவிப்பு!செய்திகள்

அரசு நில ஆக்கிரமிப்பு விவகாரம்: பரமத்திவேலூரில் கொந்தளித்த பொதுமக்கள் - போலீஸ் குவிப்பு!

SRIDHAR🕒 நவ. 27
TNO வாட்ஸ்அப் சானல் ➔