திருப்பத்தூரில் வாக்காளர் சிறப்பு முகாம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் மத்திய நகரம் சார்பில் ஆட்டோ விளம்பரப் பிரச்சாரம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் நகர் முழுவதும் நடைபெற்ற இந்த பிரச்சார நிகழ்விற்கு நகரக் கழக செயலாளர் அச்சுதன் தலைமை தாங்கினார். திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தெற்கு மாவட்டக் கழக செயலாளருமான திருப்பதி அவர்கள் கொடியசைத்து இந்த ஆட்டோ பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்; குறிப்பாக நகர நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், வார்டு நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் உடனிருந்து சிறப்பித்தனர்.









