Settings

முகப்பு/செய்திகள்/அரசு நில ஆக்கிரமிப்பு விவகாரம்: பரமத்திவேலூரில் கொந்தளித்த பொதுமக்கள் - போலீஸ் குவிப்பு!
செய்திகள்

அரசு நில ஆக்கிரமிப்பு விவகாரம்: பரமத்திவேலூரில் கொந்தளித்த பொதுமக்கள் - போலீஸ் குவிப்பு!

🕒 27 நவ., 2026, 10:40 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அரசு நில ஆக்கிரமிப்பு விவகாரம்: பரமத்திவேலூரில் கொந்தளித்த பொதுமக்கள் - போலீஸ் குவிப்பு! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •பரமத்திவேலூர் அருகே முறையான அளவீடு செய்யாமல் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரமத்திவேலூர் அருகே உள்ள பாலப்பட்டி வாழவந்தி பிரிவு சாலை எதிரே அமைந்துள்ள 27 சென்ட் அரசு புறம்போக்கு நிலம், தனிநபர் ஒருவருக்கு முறைகேடாக பட்டா வழங்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் பொதுமக்களின் குடியிருப்புகள் மற்றும் நிலங்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, அவர்களை அப்புறப்படுத்தி நிலங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் சிலர் செயல்படுவதாகவும், இதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், பரமத்திவேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் பாலப்பட்டி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் வந்தனர். அப்போது, முன்னறிவிப்பின்றியும் முறையான அளவீடு செய்யாமலும் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூடாது எனக் கூறி அப்பகுதி மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தனிநபர் ஒருவருக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய பொதுமக்கள், முதலில் முறையாக நில அளவீடு செய்து, ஆவணங்களைச் சரிபார்த்த பின்னரே ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, எந்தவித அசம்பாவிதமும் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் ஏராளமான போலீசார் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
களத்தில் அதிரடி காட்ட தயாராகும் எடப்பாடி பழனிசாமி! கரூரில் நாளை மறுநாள் பிரம்மாண்ட நிர்வாகி சந்திப்பு!செய்திகள்

களத்தில் அதிரடி காட்ட தயாராகும் எடப்பாடி பழனிசாமி! கரூரில் நாளை மறுநாள் பிரம்மாண்ட நிர்வாகி சந்திப்பு!

Anandakumar🕒 நவ. 27
விவசாய நிலங்களை அழிக்கக் கூடாது! ஈரோட்டில் கல் குவாரிக்கு எதிராக திரண்ட மக்கள்!செய்திகள்

விவசாய நிலங்களை அழிக்கக் கூடாது! ஈரோட்டில் கல் குவாரிக்கு எதிராக திரண்ட மக்கள்!

Dinesh🕒 நவ. 27
போதைப்பொருள் இல்லாத ராமநாதபுரம்: எஸ்பி ஹரி கிரன் பிரசாத் தீவிர முன்னெடுப்பு!செய்திகள்

போதைப்பொருள் இல்லாத ராமநாதபுரம்: எஸ்பி ஹரி கிரன் பிரசாத் தீவிர முன்னெடுப்பு!

MATHANRAJ🕒 நவ. 27
அதிர்ச்சி! மதிய உணவு சாப்பிட்ட 7 பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி - தீவிர விசாரணை!செய்திகள்

அதிர்ச்சி! மதிய உணவு சாப்பிட்ட 7 பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி - தீவிர விசாரணை!

Ramkumarsamy🕒 நவ. 27
வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்: திருப்பத்தூரில் அதிரடியாக களமிறங்கிய தவெக!செய்திகள்

வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்: திருப்பத்தூரில் அதிரடியாக களமிறங்கிய தவெக!

ARAVINDHAN🕒 நவ. 27
விலையில்லா வேஷ்டி சேலை உற்பத்திக்கு கூடுதலாக 15 நாட்கள் அவகாசம்: அமைச்சர் விஜய் பாலாஜி அறிவிப்புநகரங்கள்

விலையில்லா வேஷ்டி சேலை உற்பத்திக்கு கூடுதலாக 15 நாட்கள் அவகாசம்: அமைச்சர் விஜய் பாலாஜி அறிவிப்பு

Dinesh🕒 நவ. 27
தனியார் பள்ளியில் சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!செய்திகள்

தனியார் பள்ளியில் சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Dinesh🕒 நவ. 27
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிப்பு!தமிழ்நாடு

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிப்பு!

SRIDHAR🕒 நவ. 27
TNO வாட்ஸ்அப் சானல் ➔