அந்தியூர் அருகே உள்ள தோப்பூர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பள்ளி முதல்வர் ராம்குமார் விழாவிற்கு வருகை தந்தவர்களை வரவேற்றுப் பேசினார்.
நிகழ்ச்சிக்கு அந்தியூர் தாசில்தார் சக்திவேல், வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் மற்றும் பள்ளித் தாளாளர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழந்தை நல பாதுகாப்பு துணை அலுவலர் விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர், குழந்தை திருமணத்தால் ஏற்படும் தீவிர பாதிப்புகள், சட்டப்பூர்வ குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் இது தொடர்பான எச்சரிக்கைகள் குறித்து மாணவிகளுக்கு விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.









