ஈரோடு சூரம்பட்டிவலசு காந்திஜி வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் . இவர் அதே பகுதியில் சில்லி கடை மற்றும் சூப்ககடை நடத்தி வருகிறார். மேலும் புகைப்பட கலைஞராக இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை புகைப்படக் கலைஞர் செந்தில்குமார் சில்லி கடைக்கு வந்துள்ளார். கடையை திறந்து வியாபாரத்திற்கு சில்லி மசாலாவை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதற்கு முன்னதாக சிலிண்டர் பயன்படுத்திக் கொண்டிருந்தபோது அப்போது எதிர்பாராத விதமாக கேஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து உள்ளது இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடலும் தீ பரவியது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து காப்பாத்த முயற்சி மேற்கொண்டனர். ஆனால் முன்புறம் கதவு பூட்டப்பட்டிருந்தது மேலும் முன்புறம் தீ கொழுந்து விட்டு எறிந்ததால் உடனடியாக மீட்க முடியவில்லை இதை அடுத்து கடையின் பின்புற கதவு வழியாக உள்ளே வந்த அக்கம் பக்கத்தினர் செந்திலை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் அவருக்கு 90% சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சில மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு முன்னதாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் அப்போது கடையில் நான்கு சிலிண்டர்கள் இருப்பது தெரிய வந்தது அதில் மூன்று சிலிண்டர்கள் முழுமையாக இருப்பது தெரிய வந்தது நல்ல வேளையாக தீயணைப்பு வீரர்கள் அந்த சிலிண்டரை பத்திரமாக அப்புறப்படுத்தினர் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது தீ விபத்து நடந்த கடை குடியிருப்பு மத்தியில் இருந்ததால் அப்பகுதி மக்கள் ஒரு வித பதட்டத்துடன் இருந்தனர். இந்த சம்பவம் குறித்து ஈரோடு தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
சில்லி கடையில் தீ விபத்து - உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
🕒 28 நவ., 2026, 09:27 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
✨
AI Highlights
- •ஈரோடு சூரம்பட்டிவலசு பகுதியில் சில்லி கடை உரிமையாளர் செந்தில்குமார், கேஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








