Settings

முகப்பு/செய்திகள்/டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
செய்திகள்

டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

🕒 28 நவ., 2026, 09:05 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •டெல்டா விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், மேகதாட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தவும் வலியுறுத்தி மயிலாடுதுறையில் திராவிடர் தொழிலாளர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வலியுறுத்தியும், கர்நாடக அரசு மேகதாட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்திட வலியுறுத்தியும் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து மயிலாடுதுறையில் திராவிடர் கழகத்தின் திராவிடர் தொழிலாளர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிட கழக மாவட்ட தலைவர் குணசேகரன், திராவிடர் கழக எழுத்தாளர் தளபதிராஜ் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நீர் இன்றி விளைச்சல் குறைந்த நிலையில், தற்போது காவிரி ஆற்றில் நீர் இல்லாமல் சம்பா பயிர்களும் கருகி வரும் நிலையில் டெல்டா விவசாயத்தை காத்திட தமிழக அரசு உச்சநீதிமன்றத்தின் காவிரி நதிநீர் ஆணையத்தின் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த முறையீடு செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசு காவிரி நதிநீர் பங்கிட்டு உரிமையை நிலைநாட்டும் வகையில் கர்நாடக அரசின் மேகதாட்டு அணை திட்டத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், தமிழக அரசு விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.40,000 இழப்பீடு மற்றும் வேலை இழந்து தவிக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
சில்லி கடையில் தீ விபத்து - உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்புசெய்திகள்

சில்லி கடையில் தீ விபத்து - உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Dinesh🕒 நவ. 28
விசிக ஆர்ப்பாட்டம்: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு!செய்திகள்

விசிக ஆர்ப்பாட்டம்: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு!

SASHVI🕒 நவ. 28
மாநில அளவிலான யோகாசன போட்டி: 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!செய்திகள்

மாநில அளவிலான யோகாசன போட்டி: 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!

SRIDHAR🕒 நவ. 28
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: நாமக்கல் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கல்செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: நாமக்கல் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கல்

SRIDHAR🕒 நவ. 28
ஈரோடு பர்கூர் வனப்பகுதியில் ட்ரோன் கேமரா பயன்படுத்தியவருக்கு அபராதம் - வனத்துறை நடவடிக்கைசெய்திகள்

ஈரோடு பர்கூர் வனப்பகுதியில் ட்ரோன் கேமரா பயன்படுத்தியவருக்கு அபராதம் - வனத்துறை நடவடிக்கை

Dinesh🕒 நவ. 28
ஜே.எம்.1 நீதிபதியின் வாகனத்தை தூக்கி ஓரமாக நிறுத்திய பவுன்சர்கள்அரசியல்

ஜே.எம்.1 நீதிபதியின் வாகனத்தை தூக்கி ஓரமாக நிறுத்திய பவுன்சர்கள்

Srinivasan🕒 நவ. 28
தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து திருச்சியில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!செய்திகள்

தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து திருச்சியில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

MSD🕒 நவ. 28
வீட்டு வசதி வாரிய நிலுவைத் தொகைக்கு வட்டித் தள்ளுபடி சலுகை அறிவிப்பு!நகரங்கள்

வீட்டு வசதி வாரிய நிலுவைத் தொகைக்கு வட்டித் தள்ளுபடி சலுகை அறிவிப்பு!

SRIDHAR🕒 நவ. 28
TNO வாட்ஸ்அப் சானல் ➔