மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் மோகன்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவை நடைமுறைப்படுத்தக் கூடாது, தற்போது உள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்;ப மகளிருக்கான 33 சதவீதம் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும், காவிரிநீர் உரிமைப் பிரச்னையில் தேசிய நதிநீர் ஆணையம், காவிரி ஒழுங்காற்று ஆணையம், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தமிழகத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், மயிலாடுதுறை நகராட்சி தலைவர் பதவியை பட்டியலினத்தவருக்கு ஒதுக்கவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
செய்திகள்
விசிக ஆர்ப்பாட்டம்: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு!
🕒 28 நவ., 2026, 09:22 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨
AI Highlights
- •மயிலாடுதுறையில் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்தும், காவிரி நீர் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








