நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை எதிர்த்தும், தற்போதைய தொகுதி வரையறையின்படியே மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தக் கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி மேற்கு தொகுதி விசிக சார்பில் உறையூர் குறத்தெரு பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில நிதிச் செயலாளர் தமிழாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் விசிக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்று, மத்திய பாஜக அரசை கண்டித்தும், தொகுதி மறுசீரமைப்புத் திட்டத்தை எதிர்த்தும் முழக்கங்களை எழுப்பினர்.
செய்திகள்
தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து திருச்சியில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
🕒 28 நவ., 2026, 09:14 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
✨
AI Highlights
- •தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து திருச்சியில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








