Settings

முகப்பு/செய்திகள்/திருச்சி கிழக்கு தொகுதி: வேட்பாளர் தேர்வில் அதிரடி காட்டும் வேளாளர் கூட்டமைப்பு!
செய்திகள்

திருச்சி கிழக்கு தொகுதி: வேட்பாளர் தேர்வில் அதிரடி காட்டும் வேளாளர் கூட்டமைப்பு!

🕒 28 நவ., 2026, 09:40 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
திருச்சி கிழக்கு தொகுதி: வேட்பாளர் தேர்வில் அதிரடி காட்டும் வேளாளர் கூட்டமைப்பு! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தங்கள் சமூக வேட்பாளரை நிறுத்தும் கட்சிக்கே ஆதரவு என அகில உலக வேளாளர், வெள்ளாளர் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

அகில உலக வேளாளர் வெள்ளாளர் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி உறையூர் பகுதியில் இன்று நடைபெற்றது. நிர்வாகி அண்ணாதுரை பிள்ளை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நிர்வாகி கதிரேசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். லட்சுமணன், தியாகராஜன் ஆகியோர் வரவேற்புரை வழங்கினர். இதில் வேளாளர், வெள்ளாளர், பிள்ளைமார், முதலியார், கொங்கு வேளாளக் கவுண்டர், வெள்ளாஞ்செட்டியார் உள்ளிட்ட 43-க்கும் மேற்பட்ட உட்பிரிவுகளை சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின்னர் நிர்வாகி கதிரேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 25 முதல் 30 சதவீதம் வரை சுமார் இரண்டு கோடி பேர் வேளாளர் - வெள்ளாளர் சமூகத்தினர் உள்ளோம். ஆனால், அரசியல் மற்றும் பிற துறைகளில் எங்களுக்கான பிரதிநிதித்துவம் மிகக் குறைவாகவே உள்ளது. வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தேசித்துள்ளது. வேளாளர், வெள்ளாளர் எனப் பெயர்கள் இருந்தாலும், எங்களைப் பொறுத்தவரை அனைவரும் ஒன்றே. எனவே, வரும் கணக்கெடுப்பில் அனைவரும் 'வெள்ளாளர்' என்ற முதன்மைத் தலைப்பின் கீழ் பதிவு செய்து, அதன்கீழ் ஆறுநாட்டு வேளாளர், சோழிய வேளாளர், சைவ வேளாளர் போன்ற தங்களது உட்பிரிவுகளை குறிப்பிடுவது என இன்றைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அரசும் எங்களது 43 உட்பிரிவுகளையும் 'வெள்ளாளர்' என்ற ஒரே பிரிவின் கீழ் கொண்டு வந்து, எங்களது மக்கள் தொகை பலத்தை அரசிதழில் வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கும் ஆதரவானவர்கள் அல்ல. ஆனால், எங்களது கணக்கெடுப்பின்படி திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோரும், குறிப்பாகத் திருச்சி கிழக்கு தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரும் எங்கள் சமூகத்தினர் உள்ளனர். அடுத்து வரவுள்ள திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், எந்த அரசியல் கட்சி எங்களது சமூகத்தை சேர்ந்த தகுதியான வேட்பாளருக்கு முன்னுரிமை அளித்து வாய்ப்பளிக்கிறதோ, அவர்களுக்கு மட்டுமே எங்களது முழு ஆதரவையும், வாக்குகளையும் வழங்க முடிவு செய்துள்ளோம். எங்கள் சமூகத்தில் எந்தவித அரசியல் ஆதாயத்தையும் எதிர்பார்க்காத, வாழைக்காய் கமிஷன் மண்டித் தலைவரும், தொழிலதிபருமான பழனிவேல் பிள்ளையை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பது இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவரின் விருப்பமாக உள்ளது. அவரை வேட்பாளராக அறிவிக்கும் கட்சிக்கு ஆதரவாகத் தமிழகம் முழுவதிலுமிருந்து நாங்கள் ஒன்றிணைந்து பாடுபட்டு, அவரை வெற்றி பெறச் செய்வோம் என தெரிவித்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
விசிக ஆர்ப்பாட்டம்: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு!செய்திகள்

விசிக ஆர்ப்பாட்டம்: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு!

SASHVI🕒 நவ. 28
மாநில அளவிலான யோகாசன போட்டி: 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!செய்திகள்

மாநில அளவிலான யோகாசன போட்டி: 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!

SRIDHAR🕒 நவ. 28
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: நாமக்கல் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கல்செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: நாமக்கல் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கல்

SRIDHAR🕒 நவ. 28
ஈரோடு பர்கூர் வனப்பகுதியில் ட்ரோன் கேமரா பயன்படுத்தியவருக்கு அபராதம் - வனத்துறை நடவடிக்கைசெய்திகள்

ஈரோடு பர்கூர் வனப்பகுதியில் ட்ரோன் கேமரா பயன்படுத்தியவருக்கு அபராதம் - வனத்துறை நடவடிக்கை

Dinesh🕒 நவ. 28
ஜே.எம்.1 நீதிபதியின் வாகனத்தை தூக்கி ஓரமாக நிறுத்திய பவுன்சர்கள்அரசியல்

ஜே.எம்.1 நீதிபதியின் வாகனத்தை தூக்கி ஓரமாக நிறுத்திய பவுன்சர்கள்

Srinivasan🕒 நவ. 28
தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து திருச்சியில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!செய்திகள்

தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து திருச்சியில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

MSD🕒 நவ. 28
வீட்டு வசதி வாரிய நிலுவைத் தொகைக்கு வட்டித் தள்ளுபடி சலுகை அறிவிப்பு!நகரங்கள்

வீட்டு வசதி வாரிய நிலுவைத் தொகைக்கு வட்டித் தள்ளுபடி சலுகை அறிவிப்பு!

SRIDHAR🕒 நவ. 28
டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்செய்திகள்

டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

SASHVI🕒 நவ. 28
TNO வாட்ஸ்அப் சானல் ➔