Settings

முகப்பு/அரசியல்/தமிழக அரசு இந்து விரோத சக்தியாக செயல்படுகிறது: முதலமைச்சர் விஜய் மீது ஹெச்.ராஜா கடும் தாக்கு
அரசியல்

தமிழக அரசு இந்து விரோத சக்தியாக செயல்படுகிறது: முதலமைச்சர் விஜய் மீது ஹெச்.ராஜா கடும் தாக்கு

🕒 28 நவ., 2026, 03:54 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தமிழக அரசு இந்து விரோத சக்தியாக செயல்படுகிறது: முதலமைச்சர் விஜய் மீது ஹெச்.ராஜா கடும் தாக்கு - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு இந்து விரோதப் போக்கில் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, திருச்சி மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில்:- முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு இந்து விரோத சக்தியாகவும், மத அடிப்படைவாதிகளாகவும்செயல்படுகிறது. இந்த அரசை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை அளித்துச் செயல்படும் முதலமைச்சர் விஜய்யை மக்கள் நம்பக் கூடாது. அவரிடமிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும். சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தலங்களின் விவகாரங்களில் தமிழக அரசு தலையிடுவதில்லை. தமிழகத்தில் உள்ள இந்து கோவில்கள் அனைத்தையும் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும். மேலும், குன்றக்குடி அடிகளார் தலைமையில் தனித்து இயங்கும் வாரியத்தை அமைத்து, கோவில்களை அதன் வசம் ஒப்படைக்க வேண்டும். மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினரைக் கடுமையாகச் சாடிய எச். ராஜா, தவெக-வினர் தங்களைத் 'தூய சக்தி' என்று கூறிக்கொண்டாலும், அவர்கள் அத்தகையவர்கள் அல்ல என்றார். 41 பேரின் உயிரிழப்பிற்குக் காரணமான முதலமைச்சர் விஜய், அந்தப் பிணங்களின் மீது ஆட்சி நடத்தி வருவதாகவும் அவர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில், இந்து மதத்தின் மீது நம்பிக்கை உள்ள பெண்கள் யாரும் அங்கு சென்று வழிபட வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை என்றும், இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அவ்வாறு பேசி வருவதாகவும் அவர் கூறினார். திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில், 1931-ஆம் ஆண்டு நீதிமன்றத் தீர்ப்பின்படி 33 சென்ட் இடம் மட்டுமே தர்காவிற்குச் சொந்தமானது என்றும், அங்கு செல்வதற்கு அவர்களுக்குத் தனிப் படிகள் கிடையாது என்றும் எச். ராஜா குறிப்பிட்டார். இந்தியா இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு என்று குறிப்பிட்ட அவர், இங்கு வாழ விருப்பம் இல்லாதவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்லலாம் என்று கூறினார். மேலும், படையெடுப்பின் மூலம் நாட்டுக்குள் நுழைந்த பாபர் நமது பகைவன் என்றும், அவரை ஒருபோதும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும் எச். ராஜா தெரிவித்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு விவகாரம் - திருப்பத்தூரில் கொந்தளித்த விசிக!அரசியல்

தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு விவகாரம் - திருப்பத்தூரில் கொந்தளித்த விசிக!

ARAVINDHAN🕒 நவ. 28
உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: முருகன் சன்னதியில் தீபம் ஏற்றி பாஜகவினர் கொண்டாட்டம்!அரசியல்

உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: முருகன் சன்னதியில் தீபம் ஏற்றி பாஜகவினர் கொண்டாட்டம்!

Sugumaran🕒 நவ. 28
தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் 2027 காலண்டர் வெளியீடு!அரசியல்

தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் 2027 காலண்டர் வெளியீடு!

Dinesh🕒 நவ. 28
ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஐந்து பேர் படுகாயம்செய்திகள்

ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஐந்து பேர் படுகாயம்

Dinesh🕒 நவ. 28
திருப்பரங்குன்றம் உச்சியில் தீபம் தயார்.செய்திகள்

திருப்பரங்குன்றம் உச்சியில் தீபம் தயார்.

Vijay🕒 நவ. 28
திருநெல்வேலி சமாதானபுரம் சாலையில் குளம்போல் தேங்கும் மழைநீர்: தொற்றுநோய் பரவும் அபாயத்தால் மக்கள் அவதிசெய்திகள்

திருநெல்வேலி சமாதானபுரம் சாலையில் குளம்போல் தேங்கும் மழைநீர்: தொற்றுநோய் பரவும் அபாயத்தால் மக்கள் அவதி

Vijayaragavan🕒 நவ. 28
மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி!செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி!

SASHVI🕒 நவ. 28
விசிக ஆர்ப்பாட்டம்: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு!செய்திகள்

விசிக ஆர்ப்பாட்டம்: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு!

SASHVI🕒 நவ. 28
TNO வாட்ஸ்அப் சானல் ➔